விமானப் பயணம் - சி.எம்.ஜேசு

வேகமாக ஓடி
விவேகமாக விசை அழுத்தி
விண்ணில் எழும் விமானம்

கண்ணை மூடி கயிரினில்
கட்டுண்டு மெத்தையில்
உறங்கும் மானிடர் உடம்பு

மண்ணை விட்டு விட்டு
விண்ணில் பறக்கின்ற
தூய மகிழ்வு

வேகம் தெரியாமல் - போகும்
பாதை தெரியாமல் விண்ணையும்
மண்ணையும் உற்று நோக்கும் கண்கள்

அலைகளாய் ,மலைகளாய்
பறந்து விரிந்திருக்கும் வெண்மை
கருமைக் கலந்த மேகக் கூட்டங்கள்

பூமி மறையும் நேரம் கண்டு
திகைத்துப் போகும் கண்கள்

தொலைத்தூரம் என்றாலும்
வளையும் நேரம் தான் என
வந்திறங்கிய பெரு மகிழ்வு

அதிசய ஒளிவெள்ளம்
ஆழ்ந்த அமைதி தந்து - மனதின்
மாயைகள் களைந்து அறிவை
உணர்ந்திட செய்யும் பயணம்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (6-Jun-13, 12:16 am)
பார்வை : 59

மேலே