மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 1



விடல் சிதறல் தேங்காவும்
வித்தியாசமாக பார்க்கின்றன
என் நெற்றில் திருநிறு இட்டு
கைகள் கண்கள் மூடி
உன் சுவாசத்தின் சுழற்சி முறைக்கு பின்பு !



நீ கண்கள் மூடி வேண்டும் வேளையில்தான்
கற்சிலைகள் அனைத்தும் கண்கள் திறந்து
வேண்டுதல் ஏற்கின்றன !



எல்லோருக்கும் கையில் பிரசாதம்
உனக்கு மட்டும் காகிதத்தில்
உதிரம் கொண்டு உதிர்த்த மடலது !



அடிமேல் அடிவைத்து
பாதம் நகர்த்தி வேண்டுதலின் போது
எறும்புகள் பாதையில் சிவப்பு விளக்கிட்டு
சிறப்பு தரிசனம் வேண்டுகிறது !



வாரத்தின் ஏழும் வெள்ளியாகி விடக்கூடாதா
என் குலச்சாமியே !
உன்னை கோவிலில் தரிசிக்க



நீ சனீஸ்வரனை வேண்டும் போது
உனது அண்ணனும்
விநாயகனை வேண்டும் போது
எனது அண்ணனும்
நினைவுக்கு வருவதாக கூறும்போது
கோபம் கொள்வாய்
நான் இரண்டாவது அத்யாயம் தொடங்கிவிடுவேன் என்று



தீபத்தினை தொட்டு மூன்று முறை
கண்களில் ஒத்திக்கொள்கிறாய்
என்னோடு நடக்கும்போது மட்டும்
மூன்று அடி இடம் பெயருகிறாய் !



நீ கட்டி எடுத்து வரும்
மாலைக்காகதான் காத்திருக்கிறோம்
நானும் கடவுளும் !



அவ்வப்போது அண்ணனோடு
அருள்தரும் வேளையில்
கட்டைவிரல் திரும்பி நின்று
மணலில் புதைந்து கொள்கிறது
காவலனை கண்ட கள்வனை போல
பின்னே...
மகாலெட்சுமியை கடத்த வந்தால்
கையில் எடுத்தா கொடுப்பார்கள்
என்கிறாள் உன் தங்கை !



உன்னைவிட உன் தங்கையே அழகு என்பேன்
அப்போ அவளையோ கட்டிக்கோ
என்று முகம் சுழிப்பாய்
முகம் மாற்ற முயலுவதாய்
மீண்டும் கோபமுறச் செய்வேன்
அவளையும் சேர்த்து கட்டிகொள்வதாய் கூறி !

எழுதியவர் : மணிகண்டன் மா (6-Jun-13, 12:21 pm)
பார்வை : 73

மேலே