சுற்றுலா செல்லலாமா

கோடைகால விடுமுறையாம்
குதூகலிக்க நல்நாளாம்
தேடிபிடித்து தேர்வுசெய்து
புறபடுவோம் புன்னைகையோடு .............

பூமிதனை சூடாக்கும்
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்திடுவோம்
கண்ணெதிரில் கிடைக்கும் கழிவுகளை
குப்பை தொட்டியிலே சேர்த்திடுவோம் .............

சுற்றுலா சென்றிடுவோம்
சுகமாய் சுற்றிடுவோம்
எவ்வுயிர்க்கும் இடைஞ்சல் இல்லாமல்
இன்பமாய் ரசித்திடுவோம் ............

விலங்குகளையும் நேசிப்போம்
பறவைகளை பாதுகாப்போம்
நாம் விரும்பும் மகிழ்ச்சிக்காக
பிற உயிர்களை வஞ்சிக்காமல் ..........

புகைக்கின்ற பழக்கம்கொண்டோர்
தீர்ந்துவிட்ட மீதத்தை
காடுநோக்கி வீசும்போது
கருகிப்போகும் காட்டுமரங்கள்
அழிந்துபோகும் இயற்க்கை வளங்கள் ............

குடிக்கின்ற இளைஞர் கூட்டம்
குடித்த பின்னர் போதையிலே
உடைக்கின்ற பாட்டில்கள்
சிதறுகின்ற கண்ணாடித்துண்டுகள்
வதைக்கின்ற மிருகங்கள் ..................

வாங்கிவைத்த உணவுகளையெல்லாம்
வயிறு நிறைய உண்டுவிட்டு
சாலையில் சிதறும் குப்பைகள்
தூய்மை கெடும் இயற்க்கைவளங்கள் .............

இயற்கையன்னையின் அழகு அதை
இயற்கையோடு ரசித்திடுவோம்
வழிநெடுகிலும் செல்லும்பாதையை
விழிபோலே காத்திடுவோம் .............

சுதந்திரமாய் சுற்றிடுவோம்
சுத்தம் அதை பேணிடுவோம்
இயற்க்கை அது வளம்பெற
இணைந்தே அழைகை காத்திடுவோம் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Jun-13, 2:20 pm)
பார்வை : 102

மேலே