இதோ இவள் இறந்து விட்டாள்.....
மூடாத சவப் பெட்டிகள்...
ஆழ் குழாய்க்குள்
மழலை உடல்கள்.. ......
மெத்தனத்தால்
செத்த உயிர்
கத்தினாலும் வந்திடுமோ..?
நஷ்ட ஈடு வந்து விட்டால்
நலம் பெறுமோ
பிரிவதுவும்......
பத்துமாத வலியோடு
பாசவலி குடல் அறுக்க
பணம் வைத்தியம் பண்ணுமோ ?
மூடித் தொலைத்தால் என்ன
மூடர்களே
நரபலி கொடுக்கவோ
புதைமணல் நீர் செய்தீர்
இமை குதறி எறும்பு ஊற
இறந்து விட்டாள்
என் குழந்தை.......
ஆறுதல் சொல்ல வரும்
அரசியல் வாதியே
அடித்து நொறுக்கி விடுவேன்
அப்படியே ஓடிவிடு.....
உன் கால் ஒருநாளும்
வீதியில் படாது....
ஏசி காரில் வந்திருங்கும்
எமப்பய நீ - உனக்கு
என்ன தெரியும் என் துயரம்....
இதோ இறந்து கிடக்கிறாள்.....
இனி நான் என்ன செய்வேன்......?!