இதமான இரவுகள்...
சில்லென்ற போதினில்
சீறிவரும் காற்றினில்,
வில்லெய்திய போதினில்
வீரி வரும் அம்பென,
துள்ளி வரும் தென்றலோ
எனைத் தூண்டிவிட்டுச் செல்ல,
அள்ளென்றன சொற்கள்
என் கவிக்குள் வந்து சேர..
நிலவுப் போர்வையில்
நிறம் மாறும் இரவுகள்,
கலவிப் போர்வையில்
சுகம் காணும் உறவுகள்,
நிசப்தத நேர
நினைவுச் சாரல்கள்,
நிலையாய்த் தொடருமா
இந்த இரவின் இனிய ஊடல்கள்..
தூது செல்லு தென்றலே
தூக்கம் மறந்து இன்று,
தூவி குளிர வைக்கும்
தூரலிடத்து சென்று,
தாவி வந்து இங்கு
இதங்கள் பரப்பச் சொல்ல..
இரவுகள் இங்கு கழிய
என் இமைகள் மூடவில்லை,
உணர்வுகள் நித்தம் வழிய
என் உயிரும் கூடவில்லை,
உவமையாகிப் போகிறேன்
இயற்கை ஊடலை ரசிக்கும் ஊமைக்கு..
வாகை ஏற்ற மதியோ
வானொட்டி இருக்க,
வாராதோ வானூர்தியில்
என் வியப்புக் கண்கள் செழிக்க..
காற்றின் குளிரை ஏற்றி வைத்து
காலம் கடக்கும் வெள்ளை மதியும்,
நேற்றின் கவின் செழிப்பை விட
நாளும் வெளுக்கும் விந்தைதான் என்னவோ..
தன்னிலை மறந்த தனிமையே
தடயம் வைத்துவிட்டுச் செல்லாதே,,
என்னிலை அறியா தென்றலும்
எடுத்து அதை ஆய்வு செய்வான்.....என் ரசனைகளை!!!