தமிழா நீ தமிழனா ?

இந்தியன் என்கிற

போர்வைக்குள்

ஒளிந்து கிடக்கும்

என் அருமை தமிழ் தோழா...

எல்லா விண்ணப்பம்களில்

இனம் என்றால் இந்தியன் என்று

எழுதி எழுதி என்ன ஆனது உனக்கு ...?

நீ தமிழன் என்று மறைந்து தொலைத்ததுதான்

மிச்ச சொச்சம் ...

இந்தியனாக இரூந்து விட்டால்

உனக்கு காவிரி வருமா ?

இல்லை ...

உன் கர்நாடகம் உன் கவலை அறிந்து

தண்ணீர் தருமா?

முல்லை பெரியார் மட்டும்

கேட்டு பார்

என்ன உனக்கு ...?

கேரளம் கூட உன்னை மேலும் எட்டி

உதைக்கும்...

ராமேஸ்வரம் கடலில் நீ மீன்

பிடிக்க போனால்

சும்மா சுட்டு தள்ளுகிறது

இலங்கை ராணுவம்

நீ தமிழன் என்பதால் கேட்க

மறுக்கிறது இந்தியா என்றால்

நீ நம்ப மாட்டாய் ...

நீ இந்தியன் என்கிற போர்வையில்

அடி பட்டதற்கு....

கூடுதல் போனசாக

கூடாங்குலம் அணு மின் நிலையம்

இப்படி இருக்க இன்னும் ஏன்?

இந்திக்கு பல் இளித்து

டெல்லிக்கு கூஜா தூக்கி

தமிழனாய் செத்து போய்

இந்தியனாக வாழும்

என் அருமை தமிழா

நீ தமிழனா?

நீ எப்போது இருக்க போகிறாய் ?

நெருப்பாய் மட்டும் அல்ல

பொறுப்பாய்...மறதமிழனாய்

நீ எப்போது மாற போகிறாய் ?

இல்லை மட இந்தியனாக

இருக்க போகிறாயா ?

மிக நன்றாக யோசித்து கொள்

கொஞ்சம் இன உணர்வு கொள்

நம் பகைவர் உணர்வை வெள்...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (7-Jun-13, 11:45 pm)
பார்வை : 93

மேலே