''''''''''''''''' விபசாரத்தில் தள்ள பட்டேன் ''''''''''''''''''''''''''''''''''

கைகளை இழந்து

கால்கள் ஒடிந்து இருக்கும்

என் கணவனையும்

தாய் பாலுக்கு ஏங்கும் என் குழந்தையின்

பசியை போக்க நான் தள்ள பட்டேன்

விபசாரத்தில்.........

கணவனிடம் காட்டிய உடம்பை

மற்றவர்களிடம் காட்டி சம்பாதிக்கிறேன்......

பழக பழக பாலும் புளிக்குமாம்

அப்படிதான் எனக்கும் புளித்து விட்டது......

தெருவில் நான் போகும் பொது

மக்கள் எல்லோரும் என்னை ஏசுகிறார்கள்

அவர்களுக்கு தெரியாது

நான் இரு உயிரை வாழவைக்கும்

கடவுள் என்று......

என் குழந்தையின் கல்விக்கு என்

கற்பை இலக்குகிறேன்...

என் கணவனின் பசியை போக்க

என் உடம்பை இறையக்குகிறேன்

காம வெறிபிடித்த பிசசுக்களுக்கு ..........

இதை நான் விரும்பி செய்ய வில்லை

என் விதியால் செய்கிறேன்.......

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (8-Jun-13, 3:42 pm)
பார்வை : 110

மேலே