மனிதமும் எந்திரமும்..
மனிதன்-
படைத்தவன் படைத்துவிட்டான்,
ஏனோ,
வளர்ந்தவன் வளர்ந்துவிட்டான்..
எந்திரம்-
மனிதன் படைத்து வைத்தான்,
மானுடன் வாழ வடித்து வைத்தான்..
உதவிக்கான எந்திரங்கள்
உயிர் பறிப்பதுண்டு சில நேரம்,
உணர்வுக்கான மனிதன் ஏனோ - மற்ற
உயிர் மதியாது மானுடம் இழக்கிறான்..
கடவுள் தானோ
காற்றிலும் உரைவானோ,
அவன் படைத்த
மனிதன் இவன் தானோ,
மனிதம் நிலையாய் மறந்தானோ..
மனிதன் செய்த எந்திரம்
சற்று மனிதம் கொண்ட போதிலும்,
மேலவன் செய்த மனிதன் மட்டும்
மனிதம் மறந்து திரிவது என்ன..
படைத்தவன் மொழியே
பகுத்தறிவு மொழி,
பணித்ததைப் புரியும் எந்திரம் எங்கே..
படைத்தவன் யாரோ
பகுத்தறிவு எதுதானோ,
படைத்தவன் பிறப்பை
பரிசோதிக்கும் மனிதன் எங்கே..
படைப்பில் சிறந்தவன்
இறைவனென்ற கூற்றை,
பொய்யென நிரூபணம்
செய்தவன் இவனோ..
எந்திரங்களை இவன் படைத்ததனாலே
படைப்பில் சிறந்தவன்
இவன் தானோ..
மனிதம் மாண்ட பிறகு
மனிதன் வாழ்ந்தென்ன பயன்,
இனி எந்திரங்களைப் பெற்றெடுத்து
மனிதன் கடந்த(கடக்கக் கூடாத) எல்லைகளை அதனுள்ளே புகுத்திடுவோம்..
---------------------------------------------------------------------------
அன்பு நண்பர் கார்த்திக் கொடுத்த தலைப்பு...
வராத கவிதையை வாய் வழியே பிடுங்கி இழுத்து எழுத வைத்த தலைப்பு..ஹஹஹஹா ... நன்றிகள் கார்த்திக்
---------------------------------------------------------------------------