வளர்ப்புத் தாய்

என்னை உன் இதயவறையில்
சுமந்த தாயே!
இது உனக்காக
தாயன்பு பெரிது
அந்த அன்பைத தந்த
என் இன்னோர் தாயே
தாயின் அரவணைப்பில்
இருந்த போதும்
என் இன்னொரு தாயாக
என்னை வளர்த்தாய்
உன் துன்பம் மறந்து
என் கண்ணீர் துடைத்தாய்
பல கதைகள் சொல்லி
என் இபம் பெருக்கினாய்
உன் பசி மறந்து
என் பசி தீர்த்தாய்
உன் தூக்கம் தொலைத்து
என்னைத் தூங்க வைத்தாய்
உன் குழந்தைகளில் ஒன்றாய்
என்னைப் பார்த்தாய்
உன்னைப் போல் இன்னொரு தாய்
கிடைத்ததுவும் வரம் என்பேன் தாயே
உன்னைப் போல் இன்னொரு தாய்
கிடைத்ததுவும் வரம் என்பேன் தாயே