மும்மூர்த்திக் கவிதை

இனி என்னை ஆக்கிரமிக்க ---
அனுபவங்களுக்கு பலமில்லை ---
அவை --
நிச்சலனமான நீரோடைதான் இன்று!
மூழ்கடிக்கும் வெள்ளம் அன்று! அன்று!
அது அன்று!
ஒத்த சில அனுபவங்கள் சிந்தனையைத் தூண்ட ---
நான் படைத்த கவிதை ---
புதியதொரு நானாக என்னைப் படைத்த கவிதை ---
எதிர்கால அனுபவங்கள் தாக்காது எனைக் காக்கும்!
அது ---
பழைய என்னை அழித்து ---
புதிய என்னைப் படைத்து ---
புதிய என்னைக் காக்கும்---
மும்மூர்த்திக் கவிதை!

எழுதியவர் : ம.Kailas (9-Jun-13, 1:02 pm)
சேர்த்தது : Pragatha Lakshminarayanan
பார்வை : 53

மேலே