அதிகாரம்
பிரபல்யத்தை மட்டுமே
நாடும்
பிரபஞ்சத்தில்
அங்கீகரிக்கப் படாத
அதிகார ஆளுமைகளினாலும்
சொல்லதிகாரத்தினாலும்
மற்றவைகளை
செல்லாக் காசாக்கியோர்
குப்புற வீழ்த்தப்படலாம்
ஒருநாள் .
அன்று
அவர்கள் கோட்டம் அடங்கி
கனவுக் கோட்டைகள் சிதறடிக்கப்பட்டு
சொல்லில் உள்ள அதிகாரம் பிடுங்கப்பட்டு
நீலிக் கண்ணீருக்குப் பூசப்பட்ட
கருணைச் சாயம் வெளுக்கப்பட்டு
நாள்தோறும் சொன்ன
பொய்களுக்காக
பற்களின் இடுக்குகளில்
அங்காங்கே ஒளிந்திருந்த
சில உண்மைகளும்
நிராகரிக்கப் படும் வேளை
புரியவரும்
அதிகாரங்களால்
ஆக்க முடிவது
வெறும் மாயைகள்
மட்டுமே என்ற உண்மை .