என் வானில் நீ!! என் மனதில் நீ!! (குழந்தையின் நிலவு)
என் வானில் நீ!!
--என் மனதில் நீ!!
என் அழுகைக்கு ஆறுதல் நீ!!
--என் பசி போக்கும் ஆயுதம் நீ!!
உன் உவமை குழந்தையாய் எல்லோருக்கும் நான்
--உண்மை குழந்தையாய் எனக்கு மட்டும் நீ!!
உன்னை தொட்டு அணைக்க
--உள்ளங்கையில் வைத்து ரசிக்க
அழுது கொண்டே அம்மாவிடம் கேட்டேன் நீ
--எனக்கு வேண்டும் என்று
ஏதேதோ சொல்லி சமாளித்து அழுத முகம்
--கழுவி தூங்க சொன்னால் அம்மா!!
ஆனாலும் என் ஆசை நிறைவேற்றினாய்
--உன்னை தொட்டேன் உள்ளங்கையில்
வைத்து ரசித்தேன் எப்படி என்றால் அந்த தண்ணீர்
--நிறைந்த வாலியிலும் நீ!!
என் மனதில் நீங்கா இடம் பிடித்தாய் நீ!!!!