அயல்நாட்டு பிழைப்பு

பசி மறந்து, தாகம் தாங்கி
உறக்கம் தொலைத்து
அவனை காண ஏங்கி!

பிறந்தநாள், திருமண நாள்
மத விழாக்கள் எல்லாம்
கைபேசியிலும் , தொலைபேசியிலும் கொண்டாடி!

சிறிது அதிகம் கிடைத்தாலும்
என் குடும்பதிற்காக என
விடுமுறையை நினைக்காது உழைத்து!

பொன் வாங்கி,பொருள் வாங்கி
நாள்கள் நகர காத்திருந்து , ஓடி வந்தேன் என்
முதல் குழந்தையின் "அப்பா" என்ற மழலை கேட்க!

நொறுங்கி நின்றேன்!
காண ஓடி வந்த மழலை மொழியில்
"பூச்சாண்டி " என்றது என் குழந்தை.

ஆயிரம் பேரிடம் வசவுகள் வாங்கி, தாங்கி
உழைத்து பொருள் ஈட்டிய போது கூட
எனக்கு இப்படி வலிக்கவில்லையடா
என் செல்வமே !

நான் விடுமுறை முடிந்து செல்லும் முன்
என்னை அப்பா என்று அழைப்பாயாடா ?
என்று காத்து கொண்டு இருக்கிறேன்!

என் தங்கமே.

எழுதியவர் : டெல்சி பிரபு (12-Jun-13, 10:12 am)
பார்வை : 220

மேலே