கல்லறையின் காதலன் 555

என்னவளே...
எங்கேயோ விழுந்த
மழை தூரலில்...
மண்வாசனை தென்றலில்
கலந்து வருவது போல...
எங்கேயோ பிறந்து
என்னை வந்து சேர்ந்தாய்...
காதலால் சேர்ந்து...
காலமுழுவதும்
பிரியாமல் வாழ்வோம்
என்று முத்தமிட்டு...
இன்று மானிடர்கள்
வாழும் பூமியில்...
இடமில்லை என்று
கல்லறையில் தூங்குகிறாய்...
இனி என்றும் உன்னை
காணமுடியாது என்று...
உன் கல்லறையை
அணைத்து முத்தமிட்டபடி...
காத்திருக்கிறேன்
உன்னை காண...
மரணத்தை
எதிர் நோக்கி...
என் உயிர் பிரியும்
அந்த வினாடி...
உன் கல்லறை மடியில்.....