thozhikku oru vaazhthu....!

ஆதவன் அவதரிப்பை வானம்
              சிவப்பு கம்பளம் போர்த்தி கொண்டாடுகிறது 

நிலா பிறப்பை வானம் 
              நட்சத்திரங்கள் தூவி கொண்டாடுகிறது 

உன் பிறந்த தினம் விரைவில் கொண்டு வருவதற்கு 
             சூரியன் நிலா தினம் பிறந்த நாள் கொண்டாடி நாட்களை நகர்த்தியதை போல

தினம் எரிந்தாலும் தீபத்தின் திவ்யத்தை 
             மின் விளக்குகள் மிஞ்சுவதில்லை ........

தீபமாய் ஒருத்தி உதித்த தினம் ... இன்று 
            ஒரு தேவதையின் பிறந்த தினம் ......!


தேவதைக்கு என்ன பரிசளிப்பது ????????????

தேன்  கொண்ட பூக்கள் 
           பூக்களின் புன்னகையோ என்றும்  அவளிடத்தில் .....

உயிர் கொண்ட ஓவியங்கள் 
          முகம் பார்க்கும் கண்ணாடி கூடவா இல்லை அவளிடம் ?

ஞாபக பரிசு யார் வேண்டுமானாலும் தரலாம் 
          ஞாபகங்களை பரிசாக தந்தாலென்ன .....

என்றும் ஞாபகம் வைக்கும் அளவிற்கு ....
          ஒரு வாழ்த்து மடல்  என்ன ??????

வரம் கொடுக்கும் தேவதைக்கு 
          வழக்கமில்லா வாழ்த்து செய்தியா ????

என் பேனா விட்ட பெருமூச்சு 
          காகித்தத்தில் பட்டு கவிதை ஆகிவிட்டது .....!

மடல் திறக்கிறது .............என்  மனமும் 



 இருபதாவது பிறந்தநாளா இது  உனக்கு ....எதற்கு இந்த இளமை 
          இளைப்பாற விட்டுவிடு.....குழந்தையாகவே இருந்து விடு 

 வாழ்வை அதிகம் நேசிப்பதும் 
          வாழ்வால் அதிகம் நேசிக்கபடுவதும் குழந்தைகள் மட்டுமே 

கற்பனைக்கு சிறகு கொடு 
          கண்களுக்குள்  கனவு நடு ....!

புது மொழி கற்க அவா உள்ளதாயின் 
          பறவைகளிடம் சென்று விடு ...அவற்றின் தாய்மொழி கற்றுவிடு 

வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் இடைவெளி குறைத்து விடு 
          புன்னகையால் அந்த இடைவெளி நிரப்பிவிடு ....!

உன்னோடு இருக்கும் உயிரற்ற பொருளுக்கும் இதயம் பொருத்திவிடு 
         அதன் இதயத்துடிப்பு கேட்டு ரசி .....!

உதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வாழ்க்கையின் பரிசு ...!
       
 அதோடு என் வாழ்த்துக்களையும் எடுத்துக் கொள் .....

என் இனிய தோழிக்கு 
  என் இனிய 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 


தேடலுடன் 
தீபன் 

எழுதியவர் : DEEPAN (13-Jun-13, 7:32 pm)
சேர்த்தது : DEEPAN CHAKRAWARTHY
பார்வை : 198

மேலே