..............தனியே............

எதிர்பார்க்கப்பட்ட வரவு,
ஏமாற்றமளித்தபொழுது,
தடுக்க இயலவில்லை,
வெளிப்பட்ட கண்ணீரை !
என்றாலும்.......................
சந்திப்பு முடிய,
நாம் குறித்த நேரம் கடந்தும்,
காத்துத்தான் கிடந்தேன் !
சந்திரன் வரும்வரையில்,
சப்தநாடி ஒடுங்கி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Jun-13, 9:13 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 65

மேலே