குரு
கலைத்தாயின் கலை சொல்லினை கண்டேன் ,
என் வெண்தாளில் நீ பதித்த போன்னேழுதினில் ,
தாய்மொழியின் முழு அழகை கண்டேன் ,
என் முகம் பார்த்து நீ மொழிந்த திருமொழியினில்
மனதோடு மறந்தொடும் குளிர் நதியை
கண்டேன் ,
என் மனம் குளிர நீ தந்த தாய்மை அன்பினில் ,
இலக்கிய கவி நாவினில் மணப்பதை கண்டேன் ,
என் அகரங்களை அதிர வைக்கும் உன் செந்தமிழினில் ,
பண்டிதரை வெல்லும் என் தமிழ் குருவை கண்டேன் ,
பிரம்மனே !!!!!!!
விண்மீன்கள் அதிரும் உன் அதிசய படைப்பினில் ...