உன் நினைவுகளுடன் ......

வில்லெனும் புருவத்தால்
பார்வைக் கணைகளை எய்து
இதயத்தை இரண்டறப் பிளந்து
ரத்தமும் சதையுமாய் உறையவைத்துப்
போனவளை எண்ணியே
என் இராக்காலங்கள்
நிலவுடன் விளித்து
நட்ச்சத்திரங்களில்
குளிர் காய்கிறது ...!!!

அவள் கடைசியாய்
கையசைத்துப் போன
தெருக்களில் எல்லாம் - என்
தேகமற்ற ஆன்மாவை
தேட விட்டிருக்கிறேன்

அவள் பாதம் பட்டமண்ணின்
தடம் பார்த்து ஏதேனும்
பாதை தெரிந்தால்
வந்தெனக்கொரு
சேதி சொல்லென .......

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (13-Jun-13, 9:05 pm)
பார்வை : 136

மேலே