உறங்காத இரவு

ஏனோ தெரியவில்லை
எதனால் என்று புரியவில்லை
உன்னிடம் மட்டும் தோற்றுப்போனேன் - நான்

போய் வருகிறேன்
என்றுரைக்கும் வேளையில் கூட
மனமோ உன் குரலை விட்டு விலக மறுக்குதடி.....

எத்தனை முறை தான் உரைப்பேன்
என் மனதிற்கு...
நாளை உனை காணத்தான் இன்று
உன் குரலிடமிருந்து விடைபெறுகிறேன் என்று....

ஓராயிரம் முறை யோசித்தாலும்
நீ கொண்ட கேள்விக்கு
என் மனதின் பதில் என்னவென்று
எனக்கே தெரியவில்லையடி பெண்ணே...

நாளை உனை
நேரில் காணும் பொழுது
நீ அறிவாயோ?

இவளோ தன்
உறக்கத்தை மறந்து
உனையே நினைத்து கொண்டிருந்தாள் என்று...

எனக்கென
என்ன கொண்டு வந்தாய்
என்று கேட்கும் - உன்
உள்ளத்திற்கு புரிய வேண்டாமா?....

இவளோ
தனை மறந்து
உனக்கென - தன்
உள்ளத்தையே கொண்டு வருகிறாள் என்று....

இன்னும் நான் என்னவென்று
சொல்வதடி பெண்ணே..
உன் நினைவில் - எனக்கென
நான் கோர்க்கும்
மலர் கூட வாடுதடி கண்ணே!....

நீரின்றி வாடும் கொடி போல...
மணமின்றி தவிக்கும் மலராக....

எழுதியவர் : மலர் பிரபா (14-Jun-13, 8:03 pm)
பார்வை : 381

மேலே