அம்மா!
அம்மா
இறைவன்
தூது இன்றி தூதாய்
உன்னை வைத்தான் - நீ
வேதம் என்பதால் !
அம்மா!
உனக்கான காத்து அதுவே
என் சுவாசம் !
நான்
மொழி அறியாமல்
மொழிந்த வார்த்தைகளை
தத்துவம் என்று
மகிழ்ந்த உயிர் அம்மா !
கொஞ்சும் மொழிதந்து
பிஞ்சு விரல் பிடித்து நடத்தி
என்னை அழகாக்க
உன்னை அழுக்காக்கியவள் அம்மா !
அறியாமல் உதைத்தபோது
அழகுஅழகு என்றாய்
அறிவுinti uthaikkumpothu
கால் வலிக்குமா என்கிறாயே
கருணையோடு !
உன்
கருணைக்கு முன்னால் நான்
காணாமல் போகிறேன் !
அம்மா
அருளின் வானம்
Alla முடியும்
அளக்க முடியாது !
நீ
உயிர் தந்த உறவு
இடை வந்த உறவெல்லாம்
இரவலென சென்றாலும்
நீ
இகபர வாழ்வுக்கு
இறைவனின்
அருள்மாரி !!
அம்மா ! - நீயே
அன்பு
அறிவு
அழகு
அமைதி
உன்னை மதிக்கும்போது
மகத்துவமாகிறது
மானிடம் !!
கருவறை சுமந்த உன்னை
கருத்தினில் சுமக்கும்
உன் நினைவுகளில்
என்மனம்
ஒருகவிதையை
எழுதுகிறது எப்போதும் ! அது
கண்கள் வழியே ......!