வேஷம்

நிஜங்கள் நிறம் மாறும் போது – இங்கே
வேஷம் இங்கே பொய் முகங்களாக

சூழ் நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை
மாறி கொள்ளும் பச்சோந்திகளாக

தனக்கு மட்டும் என்ற குறுகிய எண்ணம்
தன்னை சார்ந்தவறுக்கு என்கிற பேராசை

இந்த நிலைப்பாடுகள் மாறும் போது
மனிதன் தன் மதி இழக்கிறான்

பொய்யை மறைக்க மற்றொரு பொய்
கூடிகொண்டே போகும் பாவம் உலகில்

நிலை இல்லாத உலகில் வாழ்வோம்
இறைவனை மறந்த மன நிலை

வேண்டாம் ! இனி பொய் வேஷம்
உண்மை முகத்திற்கு அருள் உண்டு

உள்ள முகங்களே உண்மை சாட்சி
பொய் வேஷம் அழிவின் காட்சி !

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (15-Jun-13, 6:57 pm)
பார்வை : 189

மேலே