வரிகளில் வாழ்க்கை - சி.எம்.ஜேசு

நல்ல எண்ணங்களெல்லாம்
பூர்த்தியாக்கப்படுகிறது
வண்ணங்கள் மாடல்களாகி விட்டன
வானம் வசைப்பட்டுவிட்டது
வான்வெளியில் இரும்பும் பறக்கிறது
வான்வெளி அமைப்புகள்
கணனிகள் கட்டுப்பாட்டுக்குள்
வந்து விட்டன
இடியோசை ரிக்கார்டு தட்டில்
பதிவாகி விட்டது
மழை வருவதற்காக
மின்னல்கள் ப்ளாஷ் அடித்து புகைப்பட கேமராவுக்கு போஷ்கொடுக்கின்றன
காணங்கள் நிலவின்
காதுக்கும் எட்டிவிட்டன
தானங்கள் தான் அழியாத
வாழ்வைத் தருகின்றன
ஞானங்கள் ராசி
பலனைத் தருகின்றன
குணங்கள் வகைப்படுத்தப்பட்டு
குணாதிசயங்கள் சாதனைகளாயின
மனங்கள் மறைந்து
மானங்கள் நாகரீகம் என்றாயின
ஊனங்கள் மனங்களுக்குள்
அடங்கிப்போய்விட்டன
கனவு இருப்பதனாலே
கழுதையும் கானம் பாடிக்கொள்கிறது
களவு இருப்பதனாலே
காற்றும் இரும்பை
கட்டி அணைத்துக்கொள்கிறது