என்னைப் பற்றி - சி.எம்.ஜேசு

வெற்றுக் காகிதங்களில் - நான்
கற்றவற்றை இறக்கி வைத்திருக்கிறேன்
நூரு புது கவிதைகளாக
எனக்குமுன் கோடி மனிதர்கள்
பிறந்திருக்கிறார்கள்
எனக்குமுன் எண்ணற்ற மனிதர்கள்
எழுதுகோல் பிடித்து - பலஆயிரம்
காவிங்கள் வடித்திருக்கிறார்கள்
அத்தனையும் படித்துணர்ந்து
அருஞ்செயல்கள் ஆற்றுவோர்
பலர் உண்டு - அவர்களுள்
நானும் என் அனுபவங்களை
எழுத்துக்களால் வடித்துள்ளேன்
வற்றிய சோறும் வடித்த நீரும்
நமக்கு சுவையானவை போல - நான்
கொட்டிய கவிகள் அனைத்தும்
மாந்தர் பார்வைக்கும்
அவர் செவிக்கும் சென்று
தேனாய் தெவிட்டாத அமுதமாய்
கவி பசியாற்றி - நல்ல
வாழ்க்கைப் பாதைக்கு அழைத்துச் செல்ல
என் கவிகள் துணையானால்
நான் புவியில் இருக்கும் வரை
தூயனாவேன்
இனி ஒரு முறை இல்லை வாழ்வு
பிணி பிழை நீங்கி இனிய கவிகள் கொண்டு
இதயத்தை இதமாக்கி இன்பமடைவோம்