என் நிழல் வெண்மையாக………………..

தொடர்கிறது வாழ்க்கை
என் அசைவுகள் உன்னிப்பாக
கண்காணிக்கப்பட்டு.
சேகரிக்கப்படுகின்றன
எனைப்பற்றிய தகவல்கள்
எனக்கே தெரியாத
இடங்களிலும் கூட
அறிய முடியா
காரணங்களுக்காக
தகவல் வளம்
எங்கிருந்து பெறபடுகிறது
புரியவில்லை.
சந்தேகிக்கிறேன்
என் நிழலைக்கூட
உதித்த்து கேள்வி
என் மனதில்
என்னைத் தொடரும்
என் நிழல்
ஏன் இருக்கிறது
என்றுமே
கருப்பாக மட்டுமே
பிறந்தது ஞானம்
மாற்ற வேண்டும்
என் நிழலை
வெண்மையாக
அதற்கே தெரியாமல்.