கணவா, நீ என் கனவா

நீயும் நானும்
நகமும் சதையும் போல
சதையாய் என்றும் நீ
நான் என்றுமே நகமாய்

நான் வளரும்போதெல்லாம்
என் வளர்ச்சியை
வெட்டும் கருவி
என்றுமே நீயாய்

உன் கைவிரல் நகங்களை
வெட்டும் பணி
என்றுமே எனதாய் !

நிலைத்த சதையாய்
என்றுமே நீ
வளர்ச்சி இன்றி,
அதனால்
என் வளர்ச்சி
பொறுக்க முடியாமல்
எனை வெட்டிக்கொண்டே!

உன்னை மீறி
வளர முடியாமல் நான்

நகமாய் நீயும், சதையாய் நானும்
இருந்திருந்தால்
உன்னை வெட்டாமல்,
உன் பாதுகாப்பில்
குளிர்காய ஏங்குமே
என் மனது

நகமாய் மாறிவிடு
என் கணவா
சதையாய்
என்னை மாறவிடு

கணவா, நீ என் கனவா?

எழுதியவர் : மங்காத்தா (15-Jun-13, 9:06 pm)
பார்வை : 116

மேலே