சுமை

நதியை
சுமந்தது மண்
இலையை
சுமந்தது நதி
எறும்பை
சுமந்தது இலை
வாழ்வை
சுமந்தது எறும்பு
எறும்பு
கரை ஏறும் வரை
அதை தள்ளி விட்ட விரலில்
ஒட்டிக்கொண்டிருந்தது
சிறு துகள் என
ஒரு உலக சுமை....

எழுதியவர் : கவிஜி (16-Jun-13, 7:51 pm)
Tanglish : sumai
பார்வை : 102

மேலே