முகம் முழுவதும்

படித்ததில் வேதனை தந்தது:

முகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் 4 வயது குழந்தை:
முகம் முழுவதும் ரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் பலரை நீங்கள் பார்த்திருக்க கூடும்.
இது ஒரு அரிய மரபணு குறைபாட்டு நோய். இதற்கு முன்னர் இவ்வாறு பல ஆண்கள் பெண்கள் உலகில் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் சீனாவைச்சேர்ந்த 4 வயதான ஒரு சிறுமியை தாக்கியுள்ளது இந்த அரிய நோய். உடல் எங்கும் முகம் எங்கும் ரோமங்கள் காணப்படும் ஜிங்இ ஜிங் எனப்படும் இக்குழந்தைக்கு 2 வயது முதல் ரோமங்கள் வளரத் தொடங்கியுள்ளது.

இருந்த போதிலும் அந்த நேரத்தில் சந்திரசிகிச்சை எனப்படும் ரோமங்களை நீக்குவதற்கான சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன்வரவில்லை. சிறிய வயது என்பதால் ஆபத்தானது என கருதி டாக்டர்கள் சிகிச்சையை தள்ளிப்போட்டதாக தெரியவருகிறது.

ஆனால் தற்போது சிறுமிக்கு 4 வயதாகின்றமையால் சந்திரசிகிச்சை செய்து முகத்தில் வளர்ந்துள்ள மேலதிக ரோமங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை புண்படுத்துவதற்காக எழுதவில்லை வருத்தத்தை பகிர்ந்து கொண்டேன்...அவ்வளவே...

எழுதியவர் : சாந்தி (16-Jun-13, 11:17 pm)
பார்வை : 62

மேலே