நீயும் நானும் மட்டும்

எண்ணெய் இல்லாத சமையல்.....
ஆடம்பரம் இல்லாத
இயற்கை அழகு....
பவுடர் பூச்சு இல்லாத முகம்....

திறந்து வைத்த கதவின்
வழியே தென்றல் காற்று
ஜன்னல் வழியே மல்லிகை வாசம்

விரிப்பில்லாத படுக்கை....
மின் விசிறி இல்லாத தூக்கம்

கணினி இல்லாத வாழ்க்கை
போய் விடுவோம்
பழைய காலத்திற்கு....
பொய் இல்லாத நிஜ வாழ்க்கைக்கு

அங்கு நீயும் நானும் மட்டும்
எந்த இயந்திரத்தனமும்
நம்மை தொல்லை செய்யாமல்...

எழுதியவர் : சாந்தி (16-Jun-13, 11:08 pm)
பார்வை : 84

மேலே