தந்தை

தாய் உயிர்க் கொடுத்தாள்
தந்தை உழைப்பைக் கொடுத்தார்
தந்தை
வாழ்க்கையின் வழிகாட்டி
அவரது நினைவுகளே
எனது நாட்காட்டி
என்றும் அவரே
எனக்குக் கைக்காட்டி - அன்று
அவரோடு என்னை
அழைத்துச் சென்றார் ஊர்க்கூட்டி
என் வாழ்க்கையின்
புனிதப் பயணத்தின் தேரோட்டி
தந்தையை மறவேனே
தந்தை சொல்மிக்க
மந்திரம் இல்லை என்பேனே
அதனால்தான்
"என் பிதாவே என் குரு" - வென
எந்நாளும் துதிக்கின்றேன்
எந்தையை என்றும் மதிக்கின்றேன்

எழுதியவர் : s. sanku subramanian (17-Jun-13, 8:30 am)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 90

மேலே