காதலை உணர்ந்தேன்

அன்று என்னுள் காதல் இருந்தும் உணரவில்லை,
அருகில் நீ இருந்தும் புரிந்து கொள்ளதா ஜென்மம் ஆனேன்............
இன்று நீயும் விரும்புகிறாய் என்னை
நானும் விரும்புகிறேன் உன்னை
ஆனால்
உன் வாழ்க்கையோ அவளோடு
வந்து விடு என்கிறேன்
வாக்கு தந்து விட்டேன் என்கிறாய்
மதி கெட்ட பெண்ணாய் அலைகிறேன்
வழி தெரியாமல்...............
தவறு செய்து விட்டேன் தரம் கெட்டு தவிக்கிறேன்....
அன்று விலகியது நான் தான் - இன்று
விரும்புவது உன்னை தான்
வழி இருந்தால் வந்து விடு - இல்லை
வலி தந்து கொண்டு விடு
கனவே.....!
காதலை உணர்ந்தேன் - இனியும்
உணர்வேன்
உனக்காக என்றும்....