துள்ளலான துன்பம்
தூக்கமே துக்கமானது
துளி இடைவெளியின்றி துன்பம்
துரத்துகின்ற தூரம்
துணையின்றி
துடிகின்றேன்
துணிவின்றி வாழ்வினில்
தூவுவது போல இன்பம்
தூணாக யாருமில்லை
தூக்கிவிட நினைப்பதுமில்லை
தூறுகின்ற மழையைப்போல
தூய்மையான மனமுமில்லை
தூசி படிந்த இதயங்கள்
துடைத்தாலும் மாறுவதில்லை ......................