புதிய விடியலே நீ வருக வருக....!!!

புல்வெளியில் பூக்கள் எல்லாம்
புதுக் கவிதை எழுதிடவே.....
பறவைகள் தமிழ் எழுப்பி
பாட்டிசைக்கும் வான் வெளியில்...
புன்னகையும் மனப் பொதிகையில்
புறப்படுமே தேனூற்றாய்....
புது விடியலே நீ வருக என
புத்துணர்வோடு வரவேற்கிறேன்.....!
மனித மனம் ஒளிர் வானம்போல்
மகத்தாக ஜொலிக்கட்டும்...
இருள் அங்கே விலகட்டும் - இனி
இனிமையே பெருகட்டும்....
நேற்றைப் போல் இன்றும்
நிமிடங்கள் அழகுறட்டும்......!!!
வாழ்த்தி விடு எங்களை
வளம் பெறட்டும் எம் வாழ்வு...!!!