அழகை ஆராதிப்பீர்

.


அழகை ஆராதிப்பீர-அது
ஆண்டவன் சிரிப்பு.
அழகைப் போற்றுவீர்-அது
ஆன்மாவின் துடிப்பு.

மலரின் அழகு-அது
மனதுக்கு இரசிப்பு.
மழலை அழகு-அது
மனிதத்தின் குறிப்பு.

வானவில் அழகு-அது
வண்ணத்தின் பிறப்பு.
கானமும் அழகு-அது
கனியின் இனிப்பு.

கவிதை அழகு-அது
கற்பனை வடிப்பு.
கதையும் அழகு-அது
காலத்தின் மதிப்பு.

கலைகள் அழகு-அது
கலாச்சார முகப்பு.
இயற்கை அழகு-அது
இயக்கத்தின் அமைப்பு.

காலை அழகு-அது
கதிரவன் உதிப்பு.
மாலை அழகு--அது
மஞ்சளின் பதிப்பு.

பெண்ணின் அழகு--அது
பிறப்புக்கு அளிப்பு.
கண்ணின் அழகு-அது
காண்பது சிறப்பு.

இரசிக்கத்தான் அழகு-அது
புசிக்க அல்ல.
காணத்தான் அழகு--அது
ருசிக்க அல்ல.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (20-Jun-13, 4:49 am)
பார்வை : 111

மேலே