என் இனிய தமிழ் மக்களே....!!! உங்கள் ஹரிஹரன் பேசுகிறேன்...!!!

காமதேனு வேண்டுமா - தமிழ்
கல்வி அறிவு வேண்டுமா ?

கடவுள் கருணையுடன் என்
கனவினில் வந்து கேட்டார்....

காமதேனு எனக்கு
கேட்டதை மட்டுமே தரும் - தமிழ்

கல்வி அறிவு எனக்கு
கேட்காததையும் தரும் - எனவே

கடவுளே நீ எனக்கு தமிழ்
கல்வி அறிவே தா என்றேன்.....

தமிழ் நாட்டை விட்டு உன்னால்
தாண்ட முடியாதப்பா என்றார்.....

உனக்குத் தெரியாது கடவுளே
உண்மையில் தமிழன் புத்திசாலி

உலகம் எங்கும் நிறைந்திருக்கிறான்
உண்மைத் தமிழை மறைத்து வைத்து

உதடுகளில் மட்டும் பிற மொழி பேசி....!!!

கேட்டதை கொடு கடவுளே என்றேன்....!!!

சீ யூ பை .....ஹரி......
இன்னைக்கு முருகனை எல் கே ஜி சேர்க்கணும்
நான் வருகிறேன் என்று கிளம்பினார் கடவுள்...!!!

முருகா உனக்கே இந்தக் கதியா....?!!!

கனவு கலைந்தது.......

எனது குழந்தை ரெயின் ரெயின் கோ அவே
என ஆங்கில ரைம்ஸ் படித்த படி இருக்க.....

நான் பயன்படுத்திய
அவ்வையின் ஆத்திச்சூடி புத்தகம்
அனாதையாக கேட்பாரற்று பரண் மீது கிடந்தது...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Jun-13, 6:36 am)
பார்வை : 112

மேலே