பாழாப்போன மனுசப்பய !

பாழாப்போன மனுசப்பய !

பணம் பணம்முன்னு அலையுறான்
பணம் தேடி தேடி தொலயுறான் !
பணம் தேடி தேடி
உறவுகள தொலைக்கிறான் !

பணம் பணமுன்னு அலையுறான்
பணம் பின்னாலதான்
ஓடி ஓடி தொலயுறான்

நீ தொலஞ்சு உறவை தொலைச்சு
பணம் கிடச்சா
அதனால உனக்கு என்னடா பயன் .
நீ நெனச்ச பணம் கிடச்சா
அத வச்சு என்னடா நீ பண்ணுவ .

நாம வாழுறது சில காலண்டா
வாழும் காலத்தில நாலு பேருடனாச்சு
அன்பா பழகி பாரேண்டா ப்ரண்டா .

ஒரு நாள் அணியும் சட்டைய
மறுநாள் அணிய தயங்கும்
மானிடனும் இங்கே வாழுறான் .

ஒருநாள் கூட அணிய ஒரு
சட்டை கூட இல்லாமல்
தவிக்கும் மானிடனும்
இங்கே வாழுறான் .

முட்டாளும் கூட இங்கே
மூட்டைமூட்டையா
பணத்தை அள்ளுறான்

அறிவாளிகூட இங்கே
ஒருவேளை சோத்துக்கு
வழியில்லாமல்
தெருதெருவா அலையுறான் .

பணம் இல்லேயேல் -இங்கே
தினம் தொல்லையே
பணம் உள்ளதேல் இங்கே
தினம் இல்லையே தொல்லையே .

பணம் தேடுங்கள் தவறில்லை .
உறவுகளை தொலைத்து
பணம் தேடலில் பயணிக்காதீர்கள்

உறவு என்பது உங்களுக்கு
இறைவன் கொடுத்த வரவு ..

********************** நம்பிக்கையுடன்.சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-Jun-13, 1:50 pm)
பார்வை : 81

மேலே