கீறல்கள்-கே.எஸ்.கலை

உணர்வுகள் கீறும்
கிறுக்கல் சித்திரம்
கவிதை !
==
மனிதன் கீறும்
நகரும் ஓவியம்
மழலை !
==
இதழ்கள் கீறும்
இயற்கைச் சித்திரம்
சிரிப்பு !
==
வறுமை கீறும்
நவீன ஓவியம்
கந்தல் !
==
வெளிச்சம் கீறும்
இருட்டுச் சித்திரம்
நிழல் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (21-Jun-13, 8:07 pm)
பார்வை : 451

மேலே