பசி குறுங் கவிதைகள்

மழை நீர் பெய்து
வாயை மூடியது
வாய் திறந்தது சந்தோசத்தில்
தேரைகள்... !

மத்தி மீன்கள் ஆற்றில்
காத்திருப்பு பெரிய மீன்கள்
தூண்டிலில் தட்டான்... !

கோயிலில் நைவேத்தியம்
சாமிக்கு சைகையில்
அர்ச்சகருக்கு தட்டில்
சில்லறைகள் ..!

ஜோதிடம் பலித்தது
கிளிப் பேசிய மொழியில்
கூண்டில் பசியோடு
பச்சைக் கிளிகள்..!

எழுதியவர் : தயா (22-Jun-13, 4:05 pm)
Tanglish : pasi
பார்வை : 146

மேலே