நடிகர் விஜய் பிறந்தநாள் மடல்
நடிகர் விஜய் பிறந்த நாள் (22-06-2013)
பற்றிய சினிமா தலைப்பு கவிதை :
அண்ணன் டீக்கடையில் இருந்தாலும்
அன்புத் தம்பியின் இறப்புக்காக ஆயுதத்தை எடுப்பவன்
இந்த "பகவதி"
படிக்காமல் நண்பர்களோடு அரட்டை அடிப்பான்
பாசமான தந்தையின் மகன் என்று நிரூபிக்க குத்துச்சண்டையில்
பட்டம் வாங்குபவன் தான் இந்த "பத்ரி"
கலகலப்பாக இருந்தாலும்
கண்ணுக்கு எதிராக நடக்கும் குற்றத்திற்கு
சட்டத்தில் நிறுத்துவான் இந்த "தமிழன்"
இவனுக்காக பார்த்த பெண் ஓடிச்சென்றாலும்
இவன் செய்த காதல் ஒவ்வொரு "யூத்"துக்கும் ஒரு உதாரணம்
தங்கையை மெட்ராஸில் கட்டிக்கொடுத்தாலும்
தன் நண்பனின் இறப்பிற்கு "திருப்பாச்சி" அறிவாளால்
ஒவ்வொரு எதிரிகளை அழிப்பான்...
சித்திரை மாதத்திற்கு அடுத்த மாதம் தான் வைகாசி
சித்திரவதை செய்யும் அண்ணனை அடக்குவது இந்த "சிவகாசி"
பூக்களில் சிறந்த வாசனையாக இருப்பது மல்லி
புயல்போல கபடி போட்டியில் ஜெய்ப்பவன் தான் இந்த "கில்லி"
தமிழ்நாட்டில் குற்றாலத்தில் சிறந்தது தான் அருவி
தந்தையை காப்பாற்ற பறந்து வருவான் இந்த "குருவி"