நிலவும் அவளும்

திறந்த கரு
வான்
வெளி தனில்
எனை மறந்து
குளிர் வீசும்
நிலவின் பால்
ஒளி பார்த்துக்
காதல் கொண்டு
ஓடும் மேகம்
ஒன்றிடம்
அவள் பிரிவால்
வாடும்
என் பாட்டை
பாட்டாக
எழுதி
என்னவளுக்கு
அனுப்பினேன்…..
பகல் பொழுது
உளம்
பொரிந்து
இரவொளிக்கு
ஏங்கும்
உனையன்றி
அவள் நினைவில்
தினம் வாடும்
எனையாரறிவார்....
கோடை விடுப்பு
அதனால் தான்
இத்தனை
கடுப்பு....
ஒன்னரை
மாதம்
நான் இங்கு
அவள் அங்கு
மனம் வெந்து
ஏன் இந்த
வம்பு....
இரவு நேரம்
மொட்டை மாடியில்
வெட்ட
வெளிதனில்
வட்ட நிலவிடம்
ஒட்டிக்
காதலிக்கும்
மொத்த
மேகத்தையும்
வெட்ட என்னுகிறது
கெட்ட மனது
மதி மறை
நாட்களிள்
அதன் நிலை
எண்ணி
எட்டச் செல்கிறது...
சுற்ற ஆரம்பித்த
நாட்களில் இருந்து
சுற்றமான நாள்வரை
உற்ற என் தோழி
உன் வட்ட முகம்
என் மனம் புகுந்து
அதில் உன்
பிம்பம் வடித்து
எழு பிறப்பிலும்
விழும் நாள் வரை
தினம்
அர்ச்சிக்கத்
தூண்டுகிறது
மனம்
அதையே
வேண்டுகிறது .....
என் மனம்
உன்னிடம்
இதையே
முடித்திருந்தால்
நீயும்
விழித்திருந்தால்
என் பாட்டைப்
பெற்று
தன் பாட்டை
அனுப்பு......
ஒரு மாதம்
உன் பிரிவில்
இருளான
நம்
காதல்க்
கரு வானில்
இரவானால்
மறவாமல்
உறவாடும்
வெண் மேக
விண் மதி போல்
என்னாலும்
நம் நாளாய்
ஒளி வீசு
புது
மொழி பேசு ....