"வந்தது தெரியும்.போவது எங்கே?"(கவியரசு கண்ணதாசன்)
"வந்தது தெரியும்.போவது எங்கே?"(கவியரசு கண்ணதாசன்)
===============================================ருத்ரா
கவியரசே!
இங்கே இருக்கும்போது
அங்கே போவதை பற்றி
நீ பாடினாய்
அங்கிருந்தும்
இதே வரிகள் தான்
ஒலிக்கின்றன.
இங்கு
எவர் உடல் தரிக்கப்போகிறாய் நீ.
படைப்பதனால் பிரமன் என்றாய்.
அந்த பிரம்மன் படைப்புக்கே
அடிக்கடி
பிழைதிருத்தம்
போடவேண்டியிருக்கிறது
என்று
அந்த பிரமனையே
புதிதாய் நீ படைத்தால் தான் உண்டு.
அப்போது தான்
மலடு தட்டிப்போன
உன் வரிகள் உயிர் பூக்கும்.
அது எந்த வரிகள்...?
"இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இங்கு
எல்லார்க்கும் எல்லாமும் வர வேண்டும்"