அம்மாவில் அப்பா

அப்பாவின் அன்பு
எனக்கு கிடைக்கவில்லை
என் அப்பா யார் என்றே
என் அம்மாவுக்கு
தெரியவில்லை
வளர்ந்த என் முகத்தை
பார்த்து வந்து போனவர்களில்
தேடுகிறாள் - யார் என்று
தெரியாமல் திகைக்கிறாள்
நான்
காக்கையின் கூட்டில்
இடப்பட்ட குயில் முட்டையா ?
இருந்தாலும் அம்மாவில்
நான் அப்பாவை பார்கிறேன்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (25-Jun-13, 6:42 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
Tanglish : ammavil appa
பார்வை : 80

மேலே