நண்பனே!!!
என்
நெஞ்சத்தின் மையத்தில்
செந்தமிழாய்
வீற்றிருப்பாய்!!
என்
மஞ்சத்தின் பஞ்சனையில்
மார்போடு
சேர்ந்திருப்பாய்!!
ஒரு
அன்னத்தின் செயல்போல
அன்பொன்றே
மீதிவைப்பாய்!!
தேன்
கிண்ணத்தில் குழல்போல
இன்பத்தில்
மூழ்கடிப்பாய்...
பெரு
கம்பன்மொழி கவிதைகளாய்
கற்பனையில்
திணறடிப்பாய்.....
திரு
நண்பனென்று நீயாகி
இதயத்திலே
செழித்திருப்பாய்.....
சிறு
துன்பத்தில் நானிருந்தால்
துணையாக
தோள்கொடுப்பாய்......
கண்
இமைத்துநான் போனாலும்
காரணங்கள்
அடுக்கிவைப்பாய்....
மண்
பொய்த்துதான் கெடுத்தாலும்
பொன்மணியாய்
காய்த்திருப்பாய்....
விண்
விரைந்துதான் வளர்ந்தாலும்
விண்ணைவிட
உயர்ந்திருப்பாய்.....
தாய்
தொடுகின்ற ஸ்பரிசத்தில்
தரமான
மடிவிரிப்பாய்.....
ஏய்
எப்போதும் நிசப்தத்தில்
என்னருகே
நிலைத்திருப்பாய்....
நாள்
விடிகின்ற போதெல்லாம்
எனக்காக
சிறகெடுப்பாய்...
நல்
நட்பென்று சொன்னாலே
நீதானே
முதலிருப்பாய்.....
===============