சிகரெட் பேசுகின்றேன்...

சவ பெட்டிக்குள்
இருக்கின்றேன்=நான்
பிணமல்ல
பிணந்திண்ணி...

எங்களை
ஏற்றாதீர்கள்=நாங்கள்
தீபமல்ல
கொல்லிக்கட்டைகள்....

எங்களுக்கு
கழுத்தில்லை
கவனித்துபாருன்கள்=உங்கள்
விரலிடுக்கில் யாரென்று....

எங்கள்
வெள்ளாடையை உரித்து=உங்கள்
மனைவிகளுக்கு
உடுத்தாதீர்கள்....

ரத்தமில்லா
உடல்கள் நாங்கள்=எங்களை
உறுஞ்சி உறுஞ்சி
உயிர்விடாதீர்கள்....

இடுகாட்டு விறகுகட்டை
குழந்தைகள் நாங்கள்=எங்களை
தீமூட்டாதீர்கள்,
கருகுவது நாங்களலல்...

அருகில் பஞ்சு
அடியில் நெருப்பு
பஞ்சை பாருங்கள்=உங்கள்
உயிர் நிறமாறுவதை....

விட்ட புகையை
உற்று பாருங்கள்
உயிரை கேட்டு=உங்களை
ஆவிகள் சுற்றுவதை....

கோபம் தணிக்க
கோமாளிகளல்ல=நாங்கள்
இதமாய் தெரியும்
கொலையாளிகள்.....

உதடுகளை
எங்களுக்கு பிடிக்கும்=ஆனால்
உதடுகளுக்கு
உங்களையும் பிடிக்காது.....

எங்களை
நம்பாதீர்கள்=நாங்கள்
நுரையீரலுக்கு கருப்படிப்போம்.!
இதயத்திற்கு மஞ்சளடிப்போம்.!!
உயிருக்கு சிவப்படிப்போம்.!!!
////////////////////////////////////////////////

எழுதியவர் : பாசகுமார் (25-Jun-13, 4:34 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 127

மேலே