பாவப்பட்ட மிருகங்கள்
என்ன கலவரம்!
ஏன் கலவரம்?
யானை ஊருக்குள்
புகுந்து விட்டதாம்!
ஏன் யானையும் புலியும்
ஊருக்குள் வராது?
காட்டில் மரங்களை வெட்டுகிறாய்!
வேட்டைக்குத் துப்பாக்கியுடன் செல்கிறாய்!
பாவப்பட்ட மிருகங்கள்...
வேறு என்னதான் செய்யும்?
தேவைப்பட்டால் ஊருக்குள்
வரத்தான் செய்யும், அனுபவி!
வினை விதைத்தவன்
வினைதான் அறுப்பான்,
தினையா விளையும்?
அனுபவி ராஜா, அனுபவி!