பிரிவுரை கவிதை
அன்பின் உருவே! இறைவடிவே!
ஒழுக்கத்தை உயிரென மதிக்கும்படி
அறிவுரை பல கூறினீரே!
கடமை உணர்வினை கற்பித்தீர்!
ஆங்கில மொழியை கற்பிக்கும்போது
மழலைக்கு பாலைப்புகட்டும் தாயானீர்!
அன்று பொருளை வாரி வழங்கினான் பாரி!
இன்று நீரோ கல்வியை வாரி வழங்கினீரே!
நீங்கள் கற்பித்த பண்புகளை
நாங்கள் எங்கள் வாழ்க்கையிலே
பின்பற்றி நடப்போம் என்றுமே என்று
இங்கு உறுதி அளிக்கின்றோம்!
இதுவே நாங்கள் உமக்கு
அளிக்கப்போகும் அன்பின் காணிக்கை!
உங்களிடம் முன்பு கல்விகற்று
பற்பல பதவிகளில் பணியாற்றும்
மாணவர்களின் அன்பு உள்ளமும்
தங்களை என்றென்றும் போற்றுமே!
தாங்கள் எங்களைவிட்டு பிரிந்தாலும்
நாங்கள் தங்களை என்றும் மறவோமே!
இறையருளை நீங்கள் என்றும்பெற்று
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடவே
இறைவனை வேண்டுகின்றோம்!
சி.எஸ்.ஐ பள்ளி கருவூரிலே ஆங்கில பாடம் எடுத்த எங்கள் தலைமை ஆசிரியருக்கு ஓய்வு பெறும் நாளில் வாசிக்கப்பட்ட எனது பிரிவுரை மடல்!
( ஆண்டு 1992 )