பூமியின் சிரிப்பு
"இன்ன நெய்னா
எப்படி கிற ?
நல்ல கீரியா?"
என கேட்டது பூமி
"நான்
நல்லா இல்ல
நீ நல்லா கீரியா?"
நான் பூமியை விசாரிக்க
"நீ நல்லா இல்லன்னா
நான் எப்படி நல்லா
இருக்க முடியும் ?" பூமி பொருமியது
" உனக்கு என்ன கவலை ?"
நான் கேட்டது தான் தாமதம்
"என் மேல குப்பை கொட்டி ...
எச்சில் துப்பி....
முத்திரம் அடித்து
கக்குஸ் போய்....அசிங்கம்
பண்ணி உனக்கு என்ன கவலைன்னு
கேக்கிறது நாயம் இல்லை "
என்றது பூமி கண்களை கசக்கியவாறு
"சரி அழுவாதே ..."
நான் சொல்ல
"அழுவ கூட எனக்கு உரிமை இல்லியா ?"
பூமி கத்தியது
"குளு குளு எ.சி
ஓசோனில் ஓட்டை
காட்டை அழித்தல்
விவசாய நிலம் விடுகளானது எல்லாம்
உன்னை பாதித்து இருக்கு உன்னை
அதற்கு நான் மட்டும் என்ன செய்யா ?"
நான் திருப்பி கேட்க
பூமி மெல்ல மெல்ல சிரித்தது
அந்த சிரிப்பு வெறும் சிரிப்பாய்
இருக்கவில்லை
இனி வர விருக்கும்
சுனாமி மற்றும்
பூகம்பத்தின் அறிகுறியாய்
எனக்கு புரிந்தது