kadadkarai

கடற்கரை பிடிக்கும் என்றாய்

கால்பதிக்கலாம் என்றாய் ..
நானும் உன்னுடன் கூட தானே வந்தேன்

என் மிக அருகாமையில் உனது
உயிரின் சாரல்கள் ..
அடடா! …
என் கால்கள் எங்கே ?

நான் நிற்பது தரையில் இல்லை …
என் கால்களில் கடல் அலையின் சலனங்கள் இல்லை …
உயிரில் முழுவதும் உனது முதல் மட்டுமே …

இன்று முதல் நான் மனிதபிறவி அல்ல …
காதலின் முதல் பிறவி! …
ஆமம் அன்பே …
உனது காதலின் முதல் பிறவி ….
என் காதலின் உயிர் பிறவி நீ யடி !

என்றுமே நீ யடி! ….

கரை ஒதுங்கி மிக நீண்ட நேரம் நீயும் பேசவில்லை
நானும் பேசவில்லை …

காதல் அலை உன்னுள் பேசியதா?

என்னுள் தூவியது உனது காதலின் ஸ்பரிசங்களை ….



தொடரும் !………………………………..

கடல் அலையின் ஆர்ப்பரிப்பு போன்று
நமது காதலின் ஆர்ப்பரிப்பும்

என்றும் அழியாத கடல் போன்று

தொடரும்...

எழுதியவர் : sudar (14-Dec-10, 4:38 pm)
சேர்த்தது : sudar
பார்வை : 353

மேலே