வியக்கும் வியட்நாம் கடற்கரை

விரிந்த கருநீலக் கடல் அருகில்
விரித்த வெண்மணற் படுக்கை !

தொடுவானத்தைத் தொடுகின்ற
தொடர்ந்திடும் மலை முகட்டுகள் !

வாகனங்கள் விரைந்து செல்ல
வரைந்திட்ட ஓவியமாய் சாலை !

இடையில் இதயம் குளிர்ந்திட
குடையாய் நின்றிடும் மரங்கள் !

இயற்கை அளித்திட்ட எழிலா
இருப்பவர் செய்திட்ட வசதியா !

வியட்நாம் என்றாலே போரும்
வித்தியாச முகங்களும் என்போம் !

காட்சியின் மாட்சி வருடுகிறது
கண்டதும் மனமும் துடிக்கிறது !

உடனே சென்றிட தூண்டுகிறது
வியட்னாம் செல்ல வேண்டுகிறது


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Jun-13, 7:41 pm)
பார்வை : 170

மேலே