............நினைவில்..........

நினைவிருக்கிறது !
ஒரு அடங்காத அடைமழையில்,
நீ எனக்காக,
ஒரு மரத்தடியில் காத்திருந்தது !
அந்த நினைவின் பேரனைப்பு,
மறக்கயியலா தனிச்சுகம் !
அதன் காரணத்தினால் இன்றும்,
ஒரு மரம் தேடி ஓடுகிறேன் !
எப்போது தனிமையோ துயரமோ,
துடிப்புடன் சூழ்ந்தால் !
அங்கே உன் அரூபம் காத்திருக்குமென்று !!

எழுதியவர் : (26-Jun-13, 8:00 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 78

மேலே