ஒரு கடற்கரை ….

உதிர்ந்து போன மலைகளின் சுவடுகளாய் மணல்வெளிகள்....
அங்கங்கு நட்டு வைத்த பூக்களாய் சிப்பிகள்.
நாணத்தில் சிலிர்க்கும் காற்று.
வெட்கத்தில் சிரிக்கும் அலைகள் ...
நடக்க மறந்த கட்டுமரம் ;
மழலையின் கை ரேகை பதிந்த மணல் வீடுகள் ...
காதலின் கால் தடங்கள் என
அழகாய் தான் இருக்கிறது கடற்கரை.

குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் .... (26-Jun-13, 7:24 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 69

மேலே